பஞ்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்றிய தலிபான்கள் சிங்கத்தின் குகையில் சிக்கியுள்ளார்கள் என்று தேசிய எதிர்ப்பு கூட்டணி தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான்களுக்கு எதிராக அவர்களால் கைப்பற்ற முடியாத பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் அந்நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி தேசிய எதிர்ப்பு கூட்டணியை அகமது மசூத் என்பவரின் தலைமையில் உருவாக்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களுக்கும், அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டணிக்குமிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தலிபான்கள் பள்ளத்தாக்கிலுள்ள சில முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள்.
இதற்கிடையே தலிபான்கள் தேசிய எதிர்ப்பு கூட்டணியின் தலைவர் அம்ருல்லாவும், அகமது மசூத்தும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை விட்டு பிற நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள சில பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் சிங்கத்தின் குகையில் வசமாக சிக்கியுள்ளார்கள் என்று தேசிய எதிர்ப்பு படை தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.