சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டில் தாக்குதல் மேற்கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் திட்டம் தீட்டிருப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்பு துறை வருட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் கொரோனா பாதிப்பிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறோம். எனவே, உலக நாடுகள் தங்கள் நாட்டிற்கான பயண விதிமுறைகளை விலக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதனை தங்களுக்கு சாதமாகிக்கொண்டு தீவிரவாதிகள் பல நாடுகளுக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது.
அந்த வகையில், பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ள சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உடனடியாக தாக்குதல் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடையாது. எனினும், மக்கள் கவனமாகவும் விழிப்பாகவும் இருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.