சிங்கப்பூரில் நடந்த தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்துவின் நூல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டு தோறும் வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் வாசிப்பு விழா என்ற ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி வாசிப்பை எளிமையான முறையிலும் புதுமையான முறைகளிலும் வாசிக்க தூண்டும். இது மட்டுமன்றி விளையாட்டுக்கள், புதுமையான இலக்கிய தடங்கள் ஆகியவையும் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் மிக முக்கியமானது வாசிப்பு விழா. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வாசிப்பதற்காக எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும், அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மனின் சூல் என்ற நாவலுக்கும் இவ்விழாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நூல்கள் அனைத்தும் கற்பித்தல் திறனை ஊக்குவிப்பதற்கு ஏற்ற நூல்களாக இருக்கின்றன. இதைத்தொடர்ந்து இப்புத்தகங்களை எழுதிய இரண்டு எழுத்தாளர்களும் வாசிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.