Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிற்கு பயணித்த சிங்கப்பூர் கப்பல்.. கொழும்பு துறைமுகத்திற்கு வரக்காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

சிங்கப்பூர் கப்பலான தலாசா பெட்ரஸ், ஐரோப்பாவிற்கு பயணித்த நிலையில் கொழும்பு துறைமுகத்திற்கு அவசரமாக வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலாசா கப்பலானது, சுத்திகரிப்பு பொருட்களை உற்பத்தி செய்ய உபயோகப்படுத்தப்படும்  மூலப்பொருள் கொண்ட கொள்கலனில் கசிவு ஏற்பட்டதால் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறது. அதாவது இந்த கப்பல், கடந்த மாதம் 25-ஆம் தேதியிலிருந்து, சிங்கப்பூரிலிருந்து பயணத்தை  தொடங்கியிருக்கிறது. இன்று காலையில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருக்கிறது.

பழுதடைந்த கொள்கலன் நீக்கி சரி செய்யப்படும். அதன்பின்பு, மீண்டும் துறைமுகத்திலிருந்து கப்பல் வெளியேற்றப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த கப்பலானது, சிங்கப்பூரிலிருந்து பயணத்தை தொடங்கி சூயஸ் கால்வாய் வழியே பல ஐரோப்பிய நாடுகளை கடந்து, கொழும்பு துறைமுகத்தை அடைய தீர்மானிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |