சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத பஸ் சேவைகளை வழங்க அவ்வரசாங்கம் முடிவு செய்துள்ளது .
டிரைவர் இல்லாத பஸ்ஸின் வடிவமைப்பும் , தொழில்நுட்ப பணிகழும் நடந்து வந்த நிலையில் இதற்காக பல கட்ட சோதனையம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் டிரைவர் இல்லாத பஸ்களின் சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்த உள்ளது . மேலும் கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ளது .
இந்த பஸ்ஸானது மொபைல் ஆப் மூலம் சென்டோசா தீவில் 5.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் சுற்றி வர உள்ளது . இந்த பஸ்கள் சில்சோ பாயிண்ட் கடற்கரை ஸ்டேசன், பலாவன் கடற்கரை, டான்ஜோங் கடற்கரை மற்றும் சென்டோசா கோல்ப் கிளப் ஆகிய இடங்களில் இயக்கப்படவுள்ளது . மேலும் , டிரைவர் இல்லாத பஸ் களில் பயணம் செய்ய ‘ரைடு நவ் சென்டோசா’ என்ற மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.
இந்த பஸ் சேவை வார நாட்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், நான்கு மணிநேரம் மட்டும் இயக்கப்படும் என கூறியுள்ளது . குறிப்பாக , வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிரைவர் இல்லாத பஸ்கள் இயக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது . இந்த பஸ்களை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி. என்ஜினீயரிங் நிறுவனமானது வடிவமைத்து உள்ளது.
இதுமட்டுமின்றி அந்நிறுவனம் போக்குவரத்து அமைச்சகம், சென்டோசா மேம்பாட்டு கழகம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், “டிரைவர் இல்லாத பஸ்களில் சாலையில் நடந்து செல்பவர்கள், பாதசாரிகளை அறிந்து கொள்ளும் வகையிலும் தானியங்கி முறையில் இயங்குகின்றன என்பதை குறிக்கவும் மின்னணு அடையாளங்களை காண்பிக்கும் என்றும் கூறியுள்ளது .
இந்த பஸ்களில் பொருத்தமான வழியில் செலுத்தல், தடைகள் மற்றும் அடையாளங்களை காண உதவும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது . மேலும் , பஸ்ஸில் ஒரு டிரைவர் இருப்பார் , அவர் பஸ்சில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் மட்டும் வாகனத்தை இயக்குவார் என்றும் கூறியுள்ளது . ஏற்கனவே சிங்கப்பூரில் தானியங்கி டாக்சி, டிரக் போன்றவை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது .