சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதால் இந்திய இளைஞர் ஒருவர் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டில் பாலச்சந்திரன் பார்த்திபன் என்ற 26 வயது இந்திய இளைஞர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் அவருக்கு தொண்டை வறட்சி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையின் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் அவர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை தேடியுள்ளனர். இந்த நிலையில் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து இந்தியா செல்வதற்காக கையில் பயணச் சீட்டுடன் நின்று கொண்டிருந்த பார்த்திபனை போலீசார் அடையாள கண்டு அங்கிருந்து அழைத்துச் சென்று தனிமைபடுத்தியுள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு வீதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு 9 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.