புதுடெல்லியில் 52 வயதான பாட்டுவாத்தியார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புது டெல்லியில் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் பாட்டுவாத்தியார் மாணவிகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கின்றார். அந்தவகையில் 23 வயது பெண் ஒருவரும் இசை கற்றுக்கொள்ள பாட்டு வாத்தியாரிடம் வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய பாட்டுவாத்தியார் அவருக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது அவரது உடம்பில் அங்கு அங்கு தொடுவது என செய்து வந்துள்ளார்.
இதைப் புரிந்துகொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து சில நாட்கள் விளங்கி இருந்தபடி பார்த்து கற்று வந்துள்ளார். இந்நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச மெசேஜ் அனுப்புவது, இரவில் போன் செய்து தொந்தரவு செய்வது என பல விஷயங்களை செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனது தாயிடம் நடந்ததை கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து பாட்டு வாத்தியார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.