ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-வி என்ற ஒரு டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் முதன் முதலாக கொரோனாவிற்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்தது. இத்தடுப்பூசி கொரோனாவை எதிர்த்து 92% பயனளிப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகப்படியான மக்களுக்கு விரைவில் பாதுகாப்பு வழங்க ஒரு டோஸ் கொண்ட தடுப்பூசிக்கு அர்ஜென்டினாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் கொண்ட தடுப்பூசி நல்ல பலனளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அர்ஜெண்டினாவில் சுமார் 389 சுகாதார பணியாளர்களிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் ஒரு டோஸ் சிலருக்கும், 2 டோஸ்கள் சிலருக்கும் செலுத்தப்பட்டது. இதில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி நல்ல பலனை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.