Categories
சினிமா தமிழ் சினிமா

திரைப்படத்தில் வாய்ப்பில்லை…. சின்னத்திரையில் நுழைந்த நடிகை நமீதா…. உற்சாகமடைந்த ரசிகர்கள்….!!

நடிகை நமீதா தற்போது சின்னத்திரை சீரியலிலும் நடிக்கத் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு “எங்கள் அண்ணன்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரது உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவருக்கு திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரை பெரும்பாலும் திரைப்படங்களில் காண முடியவில்லை.

இதனையடுத்து இவர் விஜய் தொலைகாட்சியின் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விரேந்திர ராவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவருக்கு வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் நடிகை நமீதா ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் “புதுப்புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Categories

Tech |