கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் 18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவடைகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 273 பேர் உயிரிழந்துள்ளனர்.அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதால் தங்களுக்கு பிடித்தமான வகையில் பொழுதை கழித்து வருகின்றனர்.
குறிப்பாக பல்வேறு விளையாட்டு பிரபலம் தங்களின் பொழுதுபோக்கை வீடியோவாக வெளியீட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா கிரிக்கெட் மைதானத்தில் பேட்டை சுழற்றுவது போல நீண்ட வாலை கையில் சுழற்றி சாகசம் செய்கின்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இது பேட் அல்ல பாத்து கவனமா சுத்துங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
A “SWORD” MAY LOOSE IT’S SHINE,BUT WOULD NEVER DISOBEY IT’S MASTER #rajputboy pic.twitter.com/kKyKQ9vSWk
— Ravindrasinh jadeja (@imjadeja) April 12, 2020