Categories
உலக செய்திகள்

SIR, DOOR DELIVERY” கதவைத்திறந்த நீதிபதியின் மகன்…. திடீரென்று நடந்த கோர சம்பவம்…. கவலை தெரிவித்த கவர்னர்…!!

அமெரிக்காவின் பெண் நீதிபதியின் மகன் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள வடக்கு பிரான்ஸ் பகுதியில் வசித்து வருபவர் எஸ்தர் சலாஸ். இவர் அமெரிக்க மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவரது கணவர் மார்க் ஆண்டெல் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் ஒரே மகனான டேனியல் ஆண்டெல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சலாசின் வீட்டிற்க்கு டெலிவரிக்கு வந்த ஒரு மர்ம நபர் அவர் வீட்டின் வாசலில் வைத்து டேனியலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் அவரது தந்தையையும் அந்த நபர் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் சம்பவயிடத்திலேயே டேனியல் உயிரிழந்துவிட்டார்.

நீதிபதியினுடைய கணவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் நடந்த பொழுது நீதிபதி சலாஸ் கீழ்தளத்தில் இருந்துள்ளார். அதனால் அவர் இந்த தாக்குதலில் இருந்து தப்பி உள்ளார். இதுகுறித்து  நியூஜெர்சி கவர்னர் பில்மர்பி கூறுகையில், “இது அறிவில்லாத ஒரு செயல் என்றும், நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதனை நினைவில் கொள்வதற்கான சோக நிகழ்வாக இது அமைந்திருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் பாதுகாப்பதற்கான நம்முடைய பணி இன்னும் முடியவில்லை” எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |