Categories
உலக செய்திகள்

சார் அது விண்கல்லே இல்ல…ஆரம்ப கல்வி மாணவர்களின் படைப்பு.. முகம்சிவந்து திரும்பிச் சென்ற நாசா விஞ்ஞானிகள்…!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் விழுந்த விண்கல்லை ஆய்வு செய்யச் சென்ற நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்து முகம் சிவந்து திரும்பினர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் விண்கல் ஒன்று விழுந்துள்ள படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. விண்கல்  தொடர்பாக விசாரிக்க நாசா விஞ்ஞானிகள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மார்க் ஆலனை சந்தித்தனர். ஆசிரியர் அளித்த பதிலை கேட்டு விஞ்ஞானிகள் முகம் சிவந்து போனது.

ஏனென்றால் படத்தில் இருந்த விண்கல் உண்மையான விண்கல்லே இல்லை. அது எங்கள் பள்ளியில் ஆரம்பம் கல்வி பயிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறினார். மேலும் இதுகுறித்து பலரும் என்னிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நாசா விஞ்ஞானிகளும் வந்து விசாரித்தது என்னால் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |