Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயா ஜாலி..!! எம்ஜிஆர் படத்தை பார்த்து விசிலடித்த எனக்கு விசில் சின்னம்…. மயில்சாமி மகிழ்ச்சி…!!

விசில் சின்னம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று பிரபல காமெடி நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் தங்களது பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றனர். இத்தேர்தலில் சில திரை பிரபலங்களும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகர்.மேலும் ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பு வரை இவர் அதிமுகவில் இணைந்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களாக சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் மயில்சாமிக்கு விசில் சின்னம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமகிழ்ச்சி அடைந்த மயில்சாமி இதுகுறித்து கூறியதாவது, நான் எம்ஜிஆர் படத்தை பார்த்து பலமுறை விசிலடித்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு விசில் சின்னம் கிடைத்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |