Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அய்யா….. மிரட்டுதாங்கய்யா….. நீங்க தான் காப்பாத்தணும்….. புல்லுக்கட்டுடன் போராட்டம்….. கலெக்டரை கலங்க வைத்த விவசாயி…!!

திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.

அவற்றை பெற்று உரிய அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து விசாரித்து பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயி தலையில் புல்லு கட்டுடன் தனது குடும்பத்தினருடன் வந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது  அவரை மாவட்ட ஆட்சியர் சந்திக்க மனு கொடுத்துவிட்டு அவர் இவ்வாறு கூறினார்,

எனது வயலுக்கு அருகில் உள்ள பொதுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து அறுவடை செய்ய விடாமல் துன்புறுத்துகிறார்கள். அரசு அதிகாரிகள் வலியுறுத்தியும் வழிவிடாமல் பல்வேறு விதமாக மிரட்டி வருகிறார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். மனுவை கண்கலங்கி ஏற்ற மாவட்ட ஆட்சியர் விரைந்து விசாரணை நடத்தி பிரச்சினையை தீர்க்க உரிய அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

Categories

Tech |