Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்..! அடுத்த ரெய்டு எப்போ வாறீங்க… ஆஃபீசரை கலாய்த்த விஜயபாஸ்கர் மகள்…!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன். இப்போது  திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் மட்டும் எடுத்துட்டு போயிருக்காங்க. என்னுடைய 2 மொபைல் போன் மட்டும் எடுத்துட்டு போயிருக்காங்க.  இதான் என்னிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

நிறைய ஆவணங்கள் ரொம்ப ரொம்ப முக்கியமான ஆவணங்களான என்னுடைய ஆதார் கார்டு, மனைவியோட ஆதார் கார்டு, குழந்தையோட ஆதார், கார்டு அப்புறம் மாமாவோட ஆதார், அப்பாவோட ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் இப்படியான மிக மிக முக்கியமான ஆவணங்க கைப்பற்றப்பட்டு இருக்கிறது. போகும் போது கூட கேஷுவலா என் பொண்ணு கேட்டா அடுத்து எப்ப வர போறீங்க சார் ?  அப்படின்னு கேட்டா. பரவால்ல வாங்க தயாரா தான் இருக்கோம் என தெரிவித்தார்.

Categories

Tech |