சாய்பாபா வேடத்தில் நடிக்க 60 நாட்கள் விரதம் இருந்துள்ள நடிகர்.
சீரடி சாய்பாபாவை பற்றி அவரின் பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், தெரியாத சிலருக்காக சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றைக் கொண்டு திரைப்படம் உருவாகிறது.
இந்தப்படத்தை, 60க்கும் மேற்பட்ட குறும்படங்களை தயாரித்த பி.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ”சீரடி சாய்பாபா மகிமை” என்ற பெயரில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சீரடி சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர் ‘என்நெஞ்சை தொட்டாயே’, ‘திகிலோடு விளையாடு’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அபி ஜோஜோ இசையமைக்கும் இந்த படத்திற்கு ஹரிகாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இவர் சாய்பாபா வேடத்தில் நடிப்பதற்கு 60 நாட்களாக விரதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.