இஸ்ரேலிலுள்ள சிறையில் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்களில் 6 பேர் கழிவறை மூலம் குழிதோண்டி தப்பியோடியதை குறித்து பாலஸ்தீனர்களின் அதிபர் கட்சி பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிலுள்ள அதிகாரிகளால் பாலஸ்தீனர்கள் கைதுசெய்யப்பட்டால் அவர்களை பாலஸ்தீனிய மக்கள் ஹீரோவாக கருதுகிறார்கள். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் சில்போவா என்னும் பாதுகாப்பு மிகுந்த சிறை ஒன்று உள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 6 பாலஸ்தீனர்கள் இந்த சில்போவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் இஸ்ரேல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பாலஸ்தீனர்கள் அங்குள்ள கழிவறையின் மூலம் குழி ஒன்றைத் தோண்டி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்ரேல் அதிகாரிகள் சிறையிலிருந்து கழிவறையின் மூலம் குழிதோண்டி தப்பியோடிய 6 பாலஸ்தீனர்களை மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுதொடர்பாக பாலஸ்தீனர்களின் அதிபர் கட்சி அறிக்கையின் மூலம் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.