மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோவில் அழகிப்பட்டம் வென்ற laura Mojica Romero என்ற இளம்பெண் நான் வெறும் முக அழகு கொண்ட பெண் மட்டுமல்ல என்று கூறியிருந்த செய்தி ஊடகங்களில் வெளியானது. தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய மற்றொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த செய்தி என்னவென்றால், laura காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் சிறைக்கு சென்றுள்ளார்.
laura அழகி போட்டியில் வென்ற போது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்குவதற்காக நான் போராடுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். அது எதற்காக தெரியுமா? பயங்கர கடத்தல் கும்பலில் உள்ள மூன்று பெண்களில் laura-வும் ஒருவர் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அவருடன் சேர்ந்து ஐந்து ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.laura மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் 50 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும்.