Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறையில் வைத்து வெற்றிபெற்ற நபர்…. மனைவி அளித்த மனு…. ஆட்சியரின் அலுவலகத்தில் பரபரப்பு….!!

சிறையில் இருக்கும் குற்றவாளி தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது சாராயம் விற்பனை செய்வது தொடர்பாக காவல்நிலையத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதன்பின் கிருஷ்ணன் தலைமறைவாக இருந்து கொண்டே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருக்கிறார். இதில் இவருக்கு சீப்பு சின்னம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்காக கிருஷ்ணன் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்.

அப்போது லாலா ஏரி பகுதியில் கேன்கள் மற்றும் லாரி டியூப்களில் 150 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்த குற்றத்திற்காக கிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து கிருஷ்ணன் 194 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் அவரது மனைவி ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் சேர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், ராஜேஸ்வரி எனது கணவர் சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மனம்மாறி தற்போது திருந்தி வாழ்ந்து வந்தார். ஆனால் பொய் வழக்குப்போட்டு காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவரை வார்டு உறுப்பினராக பதவி ஏற்க அனுமதி வழங்கி, பொய் வழக்கிலிருந்து அவரை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |