சிறையிலிருக்கும் குற்றவாளிக்கு குண்டர் சட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அதிர்ஷ்ட லட்சுமி பகுதியில் ராஜா என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து தொடர் புகையிலை கடத்தல்களில் ஈடுபடுபட்டதால் ராஜா என்பரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் அதற்கான உத்தரவை சிறையில் இருக்கும் ராஜாவிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.