இந்திய அணியின் வீரர் முகமது சிராஜ் வாங்கிய புதிய BMW கார் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் முகமது சிராஜ். அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதற்கு காரணம், அவரது தந்தை இறந்த நேரத்திலும் கூட அவரது இறுதி சடங்கில் பங்கேற்காமல் இந்திய அணிக்காக விளையாடியதுதான். மேலும் சிட்னி மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியிலும் முகமது சிராஜை ரசிகர்கள் இனரீதியாக விமர்சித்தனர்.
இருப்பினும் தனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சிராஜ் நாடு திரும்பிய பிறகும் அவர் மீதான கவனத்தை தக்க வைத்துள்ளார். நேற்று முன்தினம் நாடு திரும்பிய உடன் அவர் செய்த முதல் செயல் அவரது தந்தையின் கல்லறைக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அவர் புதிதாக வாங்கிய BMW சொகுசு காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த BMW காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.