Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 2252…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. அதிகாரிகளின் செயல்….!!

கொரோனா தடுப்பூசி முகாமில் 2,252 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி ஒன்றியத்தில் 5௦-ற்கும் அதிகமான பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஊராட்சி தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் துணையோடு தற்போது வரை 1,884 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 167 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் 201 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதில் மொத்தமாக 2,252 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Categories

Tech |