Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அனைவரையும் கவர்ந்த சாகச நிகழ்ச்சி…. சிறப்பாக நடைபெற்ற விழா…. ஆட்சியரின் செயல்….!!

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 1 1/4 கோடி மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பார்சல் கிராமத்தில் அமைந்திருக்கும் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின் அவர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உடன் இருந்துள்ளார்.

இதனையடுத்து பல துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 21 நபர்களுக்கு முதல்வர் விருதும், 15 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் பல துறையின் சார்பில் 395 பயணிகளுக்கு ஒரு கோடியே 40 லட்சத்து 74 ஆயிரத்து 139 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் கமோண்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

Categories

Tech |