Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இலக்கு நிர்ணயம்… மழையை பொருட்படுத்தாமல் வந்த பொதுமக்கள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்ததில் மழை பெய்த காரணத்தினால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 9 கட்டமாக 95 பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் எல்லா பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது.

தற்போது இம்மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இருப்பினும் முகாமானது தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. இதில் பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி செலுத்த வந்துள்ளனர். இதனையடுத்து சில பகுதிகளில் மட்டும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி வரை நடந்த முகாமில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வந்திருக்கின்றனர். மேலும் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |