Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3 புதிய வழித்தடம்…. சிறப்பாக நடைபெற்ற தொடக்க விழா…. எம்.எல்.ஏ-வின் செயல்….!!

3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோதி எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பணிமனையில் இருந்து 3 புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இதற்கு நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமை தாங்கியுள்ளார். பிறகு நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.

இதனை அடுத்து சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேருந்துகளை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பேருந்தை ஜோதி எம்.எல்.ஏ சிறிது தூரம் ஓட்டியதில் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் அமர்ந்து கை தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

Categories

Tech |