Categories
மாநில செய்திகள்

சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கட்டண ரயில்கள் நாகர்கோவில்- தாம்பரம் ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்வார்கள். இதனால் பயனாளர்கள் வசதிக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதில் தாம்பரம்- நாகர்கோயில் ரயில் வழித்தடத்தில் அக்டோபர் 14 மற்றும் நவம்பர் 3ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து நாகர்கோயில்- தாம்பரம் ரயில்  வழித்தடத்தில் அக்டோபர் 17 மற்றும் நவம்பர் 7 தேதி ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு கட்டண ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Categories

Tech |