தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி, செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் இடையிலான சிறப்பு ரயில் சேவை ரத்தாகிறது. கோவை, காட்பாடி, கோவை அரக்கோணம் இடையிலான சிறப்பு ரயிலும், கோவை மயிலாடுதுறை இடையிலான ஜன சதாப்தி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி நாகர்கோவில் இடையிலான ரயிலும், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருச்சி செங்கல்பட்டு ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்தான சிறப்பு ரயில்களின் சேவை வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.