நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பூதனூர் ஊராட்சி பகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது ..
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை அடுத்த கீழப்பூதனூர் ஊராட்சியில் நத்தம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . இந்த தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முன்னிலை வகித்தார்.
இந்த தடுப்பூசி முகாமில் முதலில் 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.அதோடு 130 பேருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இந்த தடுப்பூசி முகாமில் மருத்துவர்கள் பிரித்திவிராஜ் மற்றும் இந்திராணி , ஊராட்சி செயலாளர் அனிதா ராணி மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி ,செவிலியர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.