Categories
தேசிய செய்திகள்

சிறப்பு ரயில் ? கொரோனா ரயில் ? மம்தா சாடல்

சிறப்பு ரயில் இயங்குகிறதா அல்லது கொரோனா அதிவிரைவு ரயில் இயங்குகிறதா? என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்…!

மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு தளர்வு குறித்தும் பேசினார். அவர் கூறியதாவது “சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது, எனினும் ஏன் ரயிலில் பயணிகள் குவிக்கப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்திய ரயில்வே துறையின் குடிபெயர் தொழிலாளர்கள் பயணிக்கும் ரயில்களில் மட்டும் தகுந்த இடைவெளியை ஏன் கடைபிடிக்கவில்லை? அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீரை ஏன் கொடுக்கவில்லை?

இந்தியன் ரயில்வே ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குகின்றனவா அல்லது கொரோனா அதிவிரைவு ரயில்களை இயங்குகின்றனவா? என்ற சந்தேகம் எழுகிறது. நானும் ஒரு முறை ரயில்வே அமைச்சராக பணியாற்றியுள்ளேன். அப்பொழுது மக்களின் தேவைக்காக ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளேன். ஆனால் மத்திய அரசு இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஏன் பொறுப்புடன் செயல்படவில்லை? அதிக பாதிப்பு உள்ள பகுதிகளிலிருந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் ரயிலில் பயணித்து சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர் என்பதை மத்திய அரசும், ரயில்வே நிர்வாகிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க 50 முதல் 70% அரசு ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மறு சீரமைப்பு பணிக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல தனியார் நிறுவனங்களிலும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் முடிந்தவரை வீட்டிலிருந்தே பணிகளை தொடரலாம். மேலும் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் வழக்கம் போல் செயல்படும் ஆனால், 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்” என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |