Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்…. அதிகாரிகளின் தகவல்….!!

சேலம் வழியாக எர்ணாகுளம்- நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருவதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து எர்ணாகுளம்- நிஜாமுதீன் (வண்டி எண் 06171) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் 17-ஆம் தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக சேலத்திற்கு 1:47 வந்தடைகின்றது. அதன்பின் இங்கிருந்து 1:50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர் வழியாக 3-ம் நாள் மாலை 5.50 மணிக்கு  நிஜாமுதீன் சென்றடையும்.

இதேபோன்று மறுமார்க்கத்தில் நிஜாமுதீன்- எர்ணாகுளம் (வண்டி எண் 06172) வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் வருகின்ற 20-ஆம் தேதி முதல் செவ்வாய் கிழமைகளில் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு சேலத்திற்கு 2-ம் நாள் இரவு 7.22 மணிக்கு வந்தடையும். அதன்பின் இங்கிருந்து இரவு  7.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையம் சென்றடையும். இந்த ரயில்கள் மறு தேதி அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |