உக்ரைன் நாட்டின் ஸ்மோலென்ஸ்க் என்ற பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுக் கூறும் விதமாக போலந்தில் நாளை சைரன் ஒலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நடக்கும் போர் எப்போது தான் முடிவடையும் என்று உலக நாடுகள் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றன. எனினும் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக போலந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய தாக்குதலிலிருந்து தப்பி உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 மில்லியன் மக்கள் போலந்து நாட்டில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், போலந்து நாட்டில் நாளை அதிகாலை நேரத்தில் ஒரு நிமிடத்திற்கு சைரன் ஒலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை கேட்டு மக்கள் அஞ்ச வேண்டாம் எனவும் இது அச்சுறுத்தல் ஒலி அல்ல. ஸ்மோலென்ஸ்க் என்ற பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.