Categories
உலக செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி…. காவல் நிலையத்தில் சரண்…. தகவல் வெளியிட்ட போலீசார்….!!

சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த 64 வயதான  Darko Desic என்பவர் கடந்த 1990ல் சொந்தமாக கஞ்சா சாகுபடி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து Darko 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிறையிலிருந்து தப்பிய Darko அவலோன் அருகில் உள்ள கடற்கரையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவலின் காரணமாக வேலையின்றி வருவாய் இல்லாமல் Darko தவித்து வந்துள்ளார். இதனால் மீண்டும் சிறைக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி புறநகர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது ” சிறையில் இருந்து தப்பிய Darko அவலோன் கடற்கரையிலேயே தங்கியுள்ளார்.

குறிப்பாக பொது முடக்கத்தினால் வேலையின்றி தவித்து வந்த Darko மீண்டும் சிறைக்கே திரும்பலாம் என்ற எண்ணத்தில் சிட்னி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதிலும் அவர் யூகோஸ்லேவியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்ற அச்சத்தில் உள்ளார். மேலும் யூகோஸ்லேவியாவின் ராணுவ சேவைகளை மறுத்ததற்காவும் தனக்கு தண்டனை கிடைக்கும் என்றும் அவர் நினைத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சிறையிலிருந்த தப்பித்த குற்றத்திற்காக மேலும் ஏழு ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க கூடும். இருப்பினும் அவர் யூகோஸ்லேவியாவிற்கு  திருப்பி அனுப்பப்படுவாரா என்பது சந்தேகத்திற்க்குரிய விஷயம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Darko ஆஸ்திரேலியாவில் தேடப்படும் குற்றவாளி என்று ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதை அவர் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

Categories

Tech |