மின்சாரம் தாக்கியாதல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் புறநானூறு தெருவில் சசிகலா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் சஞ்சனா என்ற மகளும் சித்தரஞ்சன் என்ற மகனும் இருந்துள்ளார். இதனையடுத்து சென்னை புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்ததால் சசிகலா வீட்டின் உள்ள மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டின் மாடிக்கு சென்ற சஞ்சனா மின் கசிவு ஏற்பட்டது தெரியாமல் குழாயை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டு சுய நினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தம்பி சித்தரஞ்சன் மாடிக்கு சென்று பார்த்தபோது சஞ்சனா சுய நினைவின்றி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய உறவினர்கள் சஞ்சனாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சஞ்சனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிட்லபாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.