அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் சுவரை சாப்பிடும் வினோத பழக்கம் கொண்டவராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் நிக்கோலே என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே சாக்பீஸ், பல்பம் போன்ற பொருட்களை சாப்பிடும் வினோத பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது காலப்போக்கில் வளர்ந்து தற்போது நிக்கோலே வீட்டின் சுவர்களை சாப்பிட்டு வருகிறார். இந்நிலையில் இவருக்கு இருக்கக்கூடிய இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலமாக வெளியே தெரியவந்துள்ளது. இவ்வாறு நிக்கோலேக்கு அதன் மனம் பிடிக்கும் என்பதால் தன் வீட்டில் உள்ள சுவரை அவ்வப்போது பெயர்த்து சாப்பிடுகிறார்.
இவர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3 சதுரடி சுவரையாவது சாப்பிட்டு விடுவார். இந்நிலையில் தற்போது நிக்கோலே இந்த சுவரை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகவே மாறி விட்டார். இதனையடுத்து சில நேரங்களில் வேறு வீட்டிற்கு சென்றாலும் கூட அங்கு இருக்கக்கூடிய சுவரை நிக்கோலே சாப்பிடுவது வழக்கமாக இருக்கின்றதாம். இந்த பழக்கம் முதலில் அவருடைய தாய் இறந்தபோது தூக்கத்தில் இருந்ததால் தொடங்கி தற்போது நிக்கோலே அதை விட முடியாமல் தவித்து வருகிறார்.
கடந்த 5 வருடங்களாக நிக்கோலே இப்படி சுவரை சாப்பிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சுவரை பெயர்த்து சாப்பிடுவதால் நிக்கோலேக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர் எச்சரித்தும் அந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் காய்ந்த சுண்ணாம்பின் மனம் மிகவும் என்பதால் ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுரடி சுவரை நிக்கோலே சாப்பிட்டு விடுவதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.