16 வயது சிறுமியை கடத்திய வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதியில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமியை தாமரைச்செல்வன் என்பவர் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை கடத்தி செல்ல உதவி செய்த சின்னதுரை என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கிழாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சின்னதுரை அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.