Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் சேர்ந்து வாழ முடியாத சிறுமி…. கைக்குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

காதலனுடன் சேர்ந்து வாழ முடியாததால் சிறுமி கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் நிவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படித்து வந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான பொன்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பொன்ராஜ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நிவேதாவுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் நிவேதா கர்ப்பமடைந்தார். இதனையறிந்த நிவேதாவின் பெற்றோர் இதுகுறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பொன்ராஜை கைது செய்துள்ளனர். இதற்கிடையே மாணவிக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு பிரதிக்ஷா என்று பெயர் வைத்துள்ளார். அதன்பின் மாணவியும், குழந்தையும் அவரது பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட பொன்ராஜ் ஜாமினில் வெளியே வந்து வழக்கம்போல் கூலி வேலைகளுக்கு சென்று குழந்தைக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா திடீரென தனது 7 மாத கைக்குழந்தையுடன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் நிவேதாவையும் குழந்தையையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நிவேதாவும் அவருடைய குழந்தை பிரதிக்ஷாவும்  பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கணியூர் காவல்துறையினர் நிவேதா கைக்குழந்தையுடன் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நிவேதா கர்ப்பமானதும் அவரது காதலன் பொன்ராஜ் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் நிவேதா மிகவும் மனமுடைந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பொன்ராஜ் நிவேதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். இதனால் குழந்தைக்கு தேவையான பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து வந்துள்ளார். ஆனால் வழக்கு நடைபெற்று வந்ததால் இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிவேதா தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |