பிரிட்டனில் 16 வயது சிறுமியை கொலை செய்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனிலுள்ள வேல்ஸ் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வின்ஜிங் லின் என்ற 16 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் . இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக சுன் ஜு என்ற 31 வயது மதிக்கத்தக்க நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பு 38 வயது நபர் ஒருவரை சுன் ஜு கொலை செய்ய முயன்றதாக அவர் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. தற்போது கைது செய்த சுன் ஜூ-வை காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமி வின்ஜிங் லின் உடலுக்கு அவரது குடும்பத்தினர் “மென்மையான ஆத்மா” என்று குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.