கேரளாவில் 16 வயது சிறுமியை தங்கும் விடுதியில் வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபச்சார கும்பல் ஒன்று அவரை தங்கும் விடுதிகளில் அடைத்து வைத்து கொடுமை செய்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விபச்சார கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமி திருவங்காடி போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து மலப்புரத்தை சேர்ந்த மன்சூர், நிசார் பாபு, முகமது பஷீர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட அர்ச்சனா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை 3 தங்கும் விடுதிகளில் அடைத்து வைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்வதற்கும், முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.