Categories
தேசிய செய்திகள்

என்ன அவலம் இது….? 5 நாளில் 9 நபர்களால்…. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….!!

13 வயது சிறுமி 5 நாட்களில் 9  பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அந்த சிறுமிக்கு அறிமுகமான இளைஞர் ஒருவர் ஜனவரி 4 ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். சிறுமியை கடத்திச் சென்று அந்த இளைஞரும் அவரது 6 நண்பர்களும் சேர்ந்து இரண்டு நாட்களாக கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு  சிறுமியை விடுவித்த அந்த கொடூர கும்பல் இது தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் உண்மையை யாரிடமும் சொல்லாமல் சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ஏழு பேரில் ஒருவன் மீண்டும் சிறுமியை கடத்தி சென்று காட்டு பகுதியிலும்  சாலையோர கடையில்  வைத்தும்  அவனது மூன்று நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

அதற்கு பிறகு அந்த கும்பல் சிறுமியை விடுவித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம் அதோடு முடியவில்லை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை டிரக் ஓட்டுநர்கள் இருவர் மீண்டும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.  இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் பல்வேறு குழுக்கள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த காவல்துறையினர் இதுவரை ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |