திருமணமான சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இவருக்கும் திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பிரியதர்ஷினி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியதர்ஷினியின் உடலை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.