Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேலைவிட்டு வந்த தாய்…. மகளின் விபரீத முடிவால் நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகர் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிறுமி நதியா 9-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது அமுதாவுடன் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பாண்டி கட்டிட வேலைக்கு வெளியூர் சென்றுவிட்டார்.

இதனையடுத்து அமுதா சொந்த வேலையாக மூலனூர் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வந்தபோது வீட்டு கதவு பூட்டியிருந்தது. அதன்பின் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் போது நதியா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அமுதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சிறுமி நதியாவை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நதியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |