2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாகோடு பகுதியில் பொன்னுபிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பொன்னுபிள்ளை அந்த சிறுமிகளை அடிக்கடி அழைத்து பேசுவார். இதேபோன்று பொன்னுபிள்ளை அருகில் உள்ள குளக்கரைக்கு சிறுமிகளை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் சிறுமிகள் அலறியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர்.
அப்போது பொன்னுபிள்ளை அவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது பொன்னு பிள்ளை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பொன்னுபிள்ளை மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.