Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 7 ஆண்டு சிறை…. தீர்ப்பளித்த நீதிபதி….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழநத்தம் கிராமத்தில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து வெள்ளைதுரையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில்  நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Categories

Tech |