சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகாசலபுரம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.