இளம் பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய 2 பேரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் 17 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ரவீந்திரன் என்பவர் ஆசை வார்த்தைகளைக் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்வதாக மாணவியின் பெற்றோர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவீந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதேபோன்று கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, ககரிமாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை ஆனந்தமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பம் அடைந்த சிறுமியின் உறவினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போஸ்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.