சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் டேவிட் என்ற செந்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் செந்தமிழ்செல்வன் 8 வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தமிழ்ச்செல்வனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.