Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. ஆட்டோ டிரைவர் கைது…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானம்பட்டியில் மணி என்ற மணிகண்டன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து அவர் டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |