சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கருணைநகர் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து தனபால் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தனபாலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கியுள்ளார்.