சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு பகுதியில் ராமர் மகன் தர்மலிங்கம் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் 2 பேரும் தனிமையில் வசித்து வந்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அடுத்து தர்மலிங்கம் அவரை திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கியதாக தர்மலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.