Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. வசமா சிக்கிய 3 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார் மற்றும் குறிஞ்சிநகரில் உள்ள மணிகண்டன் ஆகிய 3 நபரும் கூலித் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 நபரும் சேர்ந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.

அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் 3 நபரையும் கைது செய்தனர். இதனையடுத்து 3 நபரும் தேனி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். எனவே 3 நபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்படி, கலெக்டர் விசாகன் உத்தரவில் காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

Categories

Tech |